Friday, June 3, 2011

மனம் - 1
புலன்கள் சொல்லும் அனைத்தின் மீதும் நம்பிக்கை ஏற்படாததே மனம் அலைந்து திரிந்து கண்டுணர்ந்து சொல்லும் எல்லா வெளிப்பாடுகளும் கற்பனையென முத்திரைக் குத்தப்பட்டு அனுபவிப்பவரைத்தவிர மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருக்கிறது. அதனால் தான் உலகில் பல கடவுள்களும், பல மதங்களும்.... உண்மையில் ஒவ்வொரு ஆன்மாவும் ஒரு கடவுள். ஒரு மதம். ஒன்றின் ஒளி மற்றொன்று பயணிக்கும் பாதை. மற்றது மற்றதின் பாதை... இப்படியான ஒரு தொடர்ச் சங்கிலிப் பிணைப்பிலே அணைத்து உயிர்களும் இப்போதும் வாழ்கின்றன. முன் வாழ்ந்தவற்றோடும் தொடர்பு கொண்டிருக்கின்றன. இப்போது தொடர் கொள்வதை நிஜம் என்றும் முன்பு வாழ்ந்து மறைந்ததோடான தொடர்பு கனவு என்றும் பிரிக்கப்படுகிறது. நான் உன் கனவினைப் பார்க்கவில்லை. யாருக்கும் என் கனவு பரிட்சயமானதில்லை. நாம் ஒவ்வொருவரும் ஒரு கடவுள். நம்மை நாம் எல்லாவற்றோடும் பிணைத்துப் பார்த்தால்....